Page Loader
கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1
மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1

எழுதியவர் Sindhuja SM
May 10, 2023
07:24 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. மே-13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில், தற்போது இறுதி கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. தேர்தலுக்கு முன் கணிக்கப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தது. இறுதி கருத்துக்கணிப்புகள், கர்நாடகாவில் தொங்கு சட்டசபை ஏற்றப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறது. வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறிய பிறகு வாக்காளர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் இறுதி கருத்துக் கணிப்புகள் அமைகின்றன. எனவே அவை சரியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும், இறுதி கருத்துக்கணிப்புகள் 100% சரியாக இருக்கும் என்று கூற முடியாது.

details

பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய இறுதி கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்

ஜீ நியூஸ்-மேட்ரைஸ் இறுதி:(காங்கிரஸ் முன்னிலை) காங்கிரஸுக்கு 103-118 இடங்களும், பாஜகவுக்கு 79-94 இடங்களும் கிடைக்கும். தொங்கு சட்டசபை ஏற்றப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. குமாரசாமியின் ஜனதா தளம் தான் யார் ஆட்சிக்கு வருவார் என்பதை தீர்மானிக்கும். ஏசியாநெட் சுவர்ணா-ஜன் கி பாத்:(பாஜக முன்னிலை) பாஜக 94-117 இடங்களையும், காங்கிரஸ் 91-106 இடங்களையும் கைப்பற்றும். ஜனதா தளம் 14-24 இடங்களைப் கைப்பற்றும். இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா:(காங்கிரஸ் முன்னிலை) மத்திய கர்நாடகாவில் பதிவான மொத்த வாக்குகளில் 41% காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த வாக்குகளில் 35% பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். அதே நேரத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது பாஜக சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.