
கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
செய்தி முன்னோட்டம்
கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 13) தொடங்கியது.
மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதற்கான முடிவுகள் வெளியிடப்படும்.
73.19 சதவீத வாக்காளர்கள், அதாவது சுமார் 5 கோடி கர்நாடக மக்கள் வாக்களித்துள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் செயல்பட்டு வரும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று முக்கிய கட்சிகளும், தங்களுக்கு தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளன.
2024 பொதுத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு இந்த சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளதால், இந்தத் தேர்தல் போரில் அனைத்துக் கட்சிகளும் வெற்றிபெற விரும்புகின்றன.
details
2018ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலின் விவரங்கள்
புதன்கிழமை மாலை வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியான கருத்துக் கணிப்புகள், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறுகின்றன.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டு தேர்தலின் போது, பாஜக 104 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதற்கு முன்பு, 38 வருடங்களாக பாஜகவால் அம்மாநிலத்தில் கால் பதிக்க முடியவில்லை.
2018ஆம் ஆண்டு தேர்தலின் போது, காங்கிரஸ் 80 இடங்களையும், ஜேடி(எஸ்) 37 இடங்களையும் பெற்றிருந்தன.
2018 தேர்தலில், காங்கிரஸ் 38.04 சதவீத வாக்குகளையும், அதைத் தொடர்ந்து பாஜக 36.22 சதவீத வாக்குகளையும், ஜேடி(எஸ்) 18.36 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தன.