
கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது
செய்தி முன்னோட்டம்
கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(மே 13) தொடங்க இருக்கிறது.
வாக்கெடுப்பு இரண்டு நாட்களுக்கு முன் முடிந்திருந்த நிலையில், 34 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது.
நாளை மாலை 6 மணிக்குள் எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்பது தெரிந்துவிடும்.
வாக்கெடுப்பு 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டது. சுமார் 5 கோடி மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
அதாவது, 73.19% வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன் பிறகு, மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு மாற்றப்பட்டது.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
details
மே 14ஆம் தேதி வரை கர்நாடகாவில் மது விற்பனைக்கு தடை
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 14 மேஜைகள் போடப்படும். அதில் வாக்கு சாவடி வாரியாக வாக்குகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மே 14ஆம் தேதி காலை வரை கர்நாடகாவில் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இறுதி கருத்துகணிப்புகள் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்று தெரிவித்திருந்தது.
அப்படி தொங்கு சட்டசபை ஏற்பட்டால், கர்நாடகத்தின் மூன்றாவது பெரும் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் எந்த கட்சிக்கு ஆதரவளிக்கிறதோ, அந்த கட்சி தான் ஆட்சிக்கு வர முடியும்.
பெரும்பாலான கருத்துகணிப்புகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், கருத்துகணிப்புகள் 100% சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.