Page Loader
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு
ராஜாத்தி அம்மாளுக்கு கடந்த சில வருடங்களாகவே செரிமான கோளாறு இருந்ததாகவும் கூறப்படுகிறது

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 11, 2024
04:32 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுகவின் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ராஜாத்தி அம்மாளுக்கு கடந்த சில வருடங்களாகவே செரிமான கோளாறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே, திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தததாகவும் கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார் ராஜாத்தி அம்மாள். இதற்கிடையே, உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனையான Bonn மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்கு முன்னர் வீடு திரும்பிய ராஜாத்தி அம்மாளுக்கு, தற்போது திடீரென மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post