
செம்பரப்பக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது.
24 அடி உயரம் கொண்ட சென்னை செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.53 அடி வரை இருக்கும் பட்சத்தில் முதலில் 1,500 கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நேற்று(நவ.,29)மாலை 6,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் இன்று(நவ.,30)உபரிநீரின் அளவு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதை நேரில் சென்று ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஏரியிலிருந்து 12,000 கனஅடி நீர் வரை திறக்கப்பட்டாலும் சென்னைக்கு பாதிப்பு ஏற்படாது" என்று உறுதியளித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஆட்சியர் பேட்டி
Watch | செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றினாலும் சென்னைக்கு பிரச்னை இல்லை - காஞ்சிபுரம் ஆட்சியர் பேட்டி#SunNews | #ChennaiRains | #ChembarampakkamLake pic.twitter.com/iRValpMvLC
— Sun News (@sunnewstamil) November 30, 2023