மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்
செய்தி முன்னோட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில், கலைஞர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களுடன்,"கலைஞர் உலகம்" என்ற பெயரிடப்பட்டு அந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகம், வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத்தை பார்வையிட அனுமதி சீட்டு பெறவேண்டும். ஆனால், அதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
அனுமதி சீட்டை தமிழ்நாடு அரசின் சார்பாக உருவாக்கப்பட்ட https://www.kalaignarulagam.org/ என்ற இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு நபர், ஒரு அலைபேசி எண்ணின் மூலமாக அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ளலாம்.
தினசரி காலை 9.00மணி முதல் இரவு 8.00 மணி வரை, 6 காட்சிகளாக, பிரத்யேக காட்சிகள் திரையிடப்படும்
ட்விட்டர் அஞ்சல்
கலைஞர் உலகம்
#JUSTIN | கலைஞர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தில் நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிhttps://t.co/tysml306m1 என்ற இணையதளத்தில் பதிவு செய்து இலவசமாக உள்ளே செல்ல முடியும்#SunNews | #KalaignarUlagam | #KalaignarMemorial pic.twitter.com/dGL8lGEzAE
— Sun News (@sunnewstamil) March 4, 2024