Page Loader
மதுபானக் கொள்கை வழக்கில் கே கவிதாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு 

மதுபானக் கொள்கை வழக்கில் கே கவிதாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jul 01, 2024
06:18 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய இரண்டு பணமோசடி வழக்குகளில் பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இரண்டு ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை மே 28 அன்று ஒத்திவைத்த நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா தலைமையிலான அமர்வு, அவரது மனுக்களை நிராகரித்தது. மார்ச் 15 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் இருந்து அமலாக்க இயக்குநரகத்தால் கே.கவிதா கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.

இந்தியா 

200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த அமலாக்க இயக்குனரகம்

மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தென் மாநிலத்தை சேர்ந்த பிஆர்எஸ் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ED கூறியுள்ளது. இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா மே 15ஆம் தேதி மாலை அமலாக்க இயக்குனரகத்தால்(ED) கைது செய்யப்பட்டார். சமீபத்தில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கிட்டத்தட்ட 200 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்க இயக்குனரகம், கே கவிதாவுக்கு எதிராக தாக்கல் செய்தது.