Page Loader
கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
பழுதான விமானத்தை சரி செய்வதற்கு தேவையான விமான உதிரி பாகங்களும் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.

கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

எழுதியவர் Sindhuja SM
Sep 12, 2023
10:43 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மீண்டும் கனடாவுக்கு அழைத்து செல்ல கனடாவில் இருந்து இன்னொரு விமானம் அனுப்பட்டுள்ளது. அதோடு, பழுதான விமானத்தை சரி செய்வதற்கு தேவையான விமான உதிரி பாகங்களும் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால், அவரும் அவரது தூதுக்குழுவினரும் புது டெல்லியில் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில், அவரை இந்தியாவில் இருந்து அழைத்து செல்ல அவருக்காக இன்னொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது. ட்ரூடோ புதிதாக வரும் விமானத்தில் வீட்டிற்குச் செல்வார் அல்லது பழுதான விமானம் சரிசெய்யப்படும் வரை காத்திருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீஜன்

 இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நிலவி வரும்  பதட்டம்

"கனேடிய தூதுக்குழுவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு கனேடிய ஆயுதப்படைகள் சிறந்த முயற்சிகளை எடுத்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அவர்கள் கனடாவிற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்பு இருக்கிறது." என்று ட்ரூடோவின் அலுவலகம் கூறியுள்ளது. காலிஸ்தான் தீவிரவாத பிரச்சனைகளால் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே ஏற்கனவே பதட்டமான நிலை நிலவி வரும் நிலையில், பிரதமர் ட்ரூடோவின் விமானம் பழுதாகி நிலைமையை இன்னும் மோசமாக்கி இருக்கிறது. 2018இல் பிரதமர் ட்ரூடோ முதல்முறையாக இந்தியாவிற்கு வந்ததில் இருந்தே பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 2018இல் அவர் இந்தியா வந்த போது, கனேடிய மண்ணில் ஒரு இந்திய அரசியல்வாதியை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் எப்படியோ கனடாவின் விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.