NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 13, 2025
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 9 பேருமே குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. அவர்களின் தண்டனை விவரங்கள் நண்பகல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கொடூரம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.

    கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்கள் மோசடி மூலம் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொடுமை செய்யப்பட்டதுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து மிரட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன. இ

    ந்த வீடியோக்கள் வெளிவந்ததுடன், சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | பொள்ளாச்சி பாலியல் வழக்கு - அதிமுக முன்னாள் நிர்வாகி உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு#SunNews | #PollachiCase | #ADMK pic.twitter.com/iDeZT145kU

    — Sun News (@sunnewstamil) May 13, 2025

    வழக்கு

    CBI விசாரணையை மேற்கொண்டது, 9 பேர் கைது

    இந்த வழக்கினை CBI கையில் எடுத்து விசாரிக்க தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த்குமார், மணிவண்ணன், பாபு, ஹெரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு எதிராக கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனியறையில் 'இன்கேமரா' முறையில் நடை பெற்றது.

    சாட்சி விசாரணை மற்றும் இருதரப்பின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மஹிளா கோர்ட் நீதிபதி நந்தினிதேவி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொள்ளாச்சி
    பாலியல் வன்கொடுமை
    பாலியல் தொல்லை
    சிபிஐ

    சமீபத்திய

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு பொள்ளாச்சி
    தனியார் ஜெட், ₹45 கோடி மதிப்புள்ள மாளிகை: தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? தெலுங்கு திரையுலகம்
    சென்னையில் 16 அடிக்கு சரியும் நிலத்தடி நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சென்னை மாநகராட்சி
    பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன  இண்டிகோ

    பொள்ளாச்சி

    சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம் சுற்றுலாத்துறை
    மே 13, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு பாலியல் வன்கொடுமை
    தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு கோவை

    பாலியல் வன்கொடுமை

    தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு ஆப்கானிஸ்தான்
    நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை சட்டம்
    ஹைதராபாத்தில் ஜூஸ்-இல் மயக்கமருந்து கலந்து பலாத்காரம்: ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் 2 பேர் கைது ஹைதராபாத்
    ஆந்திரா சிறுமி கற்பழிப்பு-கொலை: பள்ளி மாணவர்கள் ஆபாச கிளிப்களில் பார்த்ததை செயல்படுத்த முயன்றதாக வாக்குமூலம் ஆந்திரா

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிபிஐ

    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல் அரவிந்த் கெஜ்ரிவால்
    பகவத் கீதா, வீட்டில் சமைத்த உணவு மற்றும் பெல்ட் ஆகியவற்றை கோரும் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், பீகாரில் இருவரை கைது செய்த சிபிஐ நீட் தேர்வு
    விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025