
நாடாளுமன்ற தேர்தல் 2024: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு
செய்தி முன்னோட்டம்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் JD(S) கட்சி சார்பில் போட்டியிட்டார்.
ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் அவர் முன்னிலையில் இருப்பதாக தோன்றினாலும், தற்போதைய நிலவரப்படி அவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேலை காட்டிலும் 43,756 வாக்குகளில் பின்னிலையில் உள்ளார்.
வாக்குப்பதிவு நெருங்கிய வேளையில், பிரஜ்வல் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாயின.
அதன் தொடர்ச்சியாக ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் இந்தியா திரும்பினார்.
பிரஜ்வல் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மறுபுறம், பிரஜ்வால் ரேவண்ணாவும் சித்தப்பாவும், JD(S) கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான HD.குமாரசாமி மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
HD.குமாரசாமி வெற்றி
JD(S) leader HD Kumaraswamy wins in #Mandya of #Karnataka, over a vote margin of 2,84,620.#ElectionsWithIndependentMedia pic.twitter.com/DLcBpgDIRO
— TheNewsMinute (@thenewsminute) June 4, 2024
ட்விட்டர் அஞ்சல்
பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு
Rape accused and JD(S) candidate from #Karnataka's #Hassan, #PrajwalRevanna trailing from the seat. #LokSabhaElections2024📷 News Updates ➠ https://t.co/9vZlbBUlBy #ElectionsWithET #LokSabhaElectionResults pic.twitter.com/GK9B6qGMm1
— Economic Times (@EconomicTimes) June 4, 2024