தனது அமைச்சர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி, செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள், உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினரும் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், அமைச்சரவையில் நீடிக்க கூடாது என ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார். அதை ஏற்றுக்கொள்ளாத முதல்வர், அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான், செந்தில் பாலாஜியின் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது