
ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி
செய்தி முன்னோட்டம்
செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரா முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டி காகுளம் மாவட்டத்தில் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், செப்டம்பர் மாதம் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.
தானும் அங்கு குடியேற இருக்கிறேன் என பேசியுள்ளார். எனவே ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்த அறிவிப்பு, மாநிலத்தின்
மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் சேர்த்து விசாகப்பட்டினம் பொது மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக்கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஆந்திராவின் நிர்வாக தலைநகராக செப்டம்பர்
— SathiyamTv (@sathiyamnews) April 20, 2023
முதல் விசாகப்பட்டினம் செயல்படும் என
அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன்
ரெட்டி அறிவித்துள்ளார்#AndhraPradesh #Visakhapatnam #YSJaganMogan #Vizag #SathiyamTV #SathiyamNews pic.twitter.com/Cpiyel5OZZ