'பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நேற்று(டிச.,22)சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது. முன்னதாக இது சம்மந்தமான வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் இல்லை என்றுக்கூறி கடந்த 2016ம்.ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு முடக்கி வைக்கப்பட்ட இவரது சொத்துக்களும் விடுவிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கையும் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அவ்வழக்கின் தீர்ப்பு இன்று(டிச.,22)அளிக்கப்பட்டுள்ளது. அதில் நீதிபதி ஜெயச்சந்திரன், 'சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பொன்முடியின் சொத்துக்களை மீண்டும் முடக்குவது தேவையற்றது. அதற்கான அவசியமும் இல்லை'என்று தெரிவித்துள்ளார். மேலும், 'தேவைப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது' என்றும்கூறி உத்தரவிட்டுள்ளார்.