போதை மருந்துகளால் 828 திரிபுரா மாணவர்களுக்கு பரவிய HIV: உண்மையில் என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
திரிபுராவில் HIVயால் 47 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 828 மாணவர்கள் HIV பாதிக்கப்பட்டுள்ளதும் இந்த வார தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.
"HIV தொற்றுள்ள 828 மாணவர்களை நாங்கள் இதுவரை பதிவு செய்துள்ளோம். அவர்களில், 572 மாணவர்கள் இன்னும் உயிருடன் உள்ளனர், மேலும் பயங்கரமான தொற்றுநோயால் 47 பேரை இழந்துள்ளோம். பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் திரிபுராவில் இருந்து நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டனர்" என்று TSACS இன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போதை மருந்து பயன்படுத்தியதை திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் கண்டறிந்துள்ளது.
இந்தியா
எப்படி திரிபுராவில் HIV பரவியது?
திரிபுராவில் பரவிய HIV தொற்று பெரும்பாலும் மாணவர்கள் போதை ஊசிகளை பயன்படுத்தியதால் ஏற்பட்டிருக்கிறது.
"HIVயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான மாணவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் பெற்றோர் இருவரும் அரசுப் பணியில் இருக்கும் குடும்பங்களும் உண்டு. அவர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன கேட்டாலும் கொடுத்து வளர்த்திருக்கின்றனர். ஆனால், தங்கள் குழந்தைகள் போதைப்பொருளுக்கு இரையாகிவிட்டதை அவர்கள் தாமதமாகவே உணர்ந்தனர்." என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் 25 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று திரிபுரா அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
828 நோயாளிகளில், 572 மாணவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், 47 பேர் பயங்கர தொற்றுநோயால் இறந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.