Page Loader
வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி
வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வழியே செல்ல அனுமதி

வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி

எழுதியவர் Nivetha P
Feb 17, 2023
10:45 am

செய்தி முன்னோட்டம்

வெளியூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வழியே செல்லலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளியூரை சேர்ந்த பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும். அலுவலக நேரத்தில் நகரத்திற்குள் வரும்போது போக்குவரத்து இடையூறு ஏற்படக்கூடிய காரணத்தினால் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுவழியாக தற்போது வரை பெருங்களத்தூர்-மதுரவாயல் பைபாஸ் வழியாக கோயம்பேடு வந்து சேருகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அண்மையில் ஓர் உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி, பகல் நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக போக்குவரத்துத்துறை

சென்னை மாநகர பகுதிக்கு வரும் பொது மக்கள் மத்தியில் வரவேற்கப்படும்

அதுவும் குறிப்பாக இந்த உத்தரவு அமலுக்கு வரும் பட்சத்தில் சென்னை மாநகர பகுதிக்கு வரும் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னைக்கு மாலை 5 மணிக்கு மேல் வரும் பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியே கோயம்பேடு செல்லுமாறு உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பகலில் பெருங்களத்தூர் வரும் அரசு பேருந்துகள் வடபழனி, குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய வழித்தடங்களுக்கு வருகை தந்த பின்னர் கோயம்பேடு சென்று சேரும் என்பது குறிப்பிடவேண்டியவை. இதற்கிடையே தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கெட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் புகாரளிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.