பங்குசந்தையில் கடும் சரிவைச் சந்தித்த இன்ஃபோசிஸ்
பங்குச்சந்தை: கடந்த வியாழக்கிழமை தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம். அது முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாகவே அன்று, அந்நிறுவனத்தின் பங்குகள் 3% சரிவைச் சந்தித்திருந்தன. வியாழக்கிழமை அன்று பங்குச்சந்தை வர்த்தக நேரம் முடிந்த பின்னரே தங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று காலை மீண்டும் துவங்கியது பங்குசந்தை. தொடங்கும் போதே 10% சரிவைத் சந்தித்து லோயர் சர்க்யூட்டிலேயே வர்த்தகத்தைத் துவக்கின இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள். சிறிது நேரத்திற்கு வாங்குவதற்கே முதலீட்டாளர்கள் இன்று அதன் வர்த்தகம் தடைப்பட்டது.
தொடர் சரிவு:
தற்போது அந்நிறுவனத்தின் பங்குகள் மேலும் மேலும் சரிவையே சந்தித்து வருகின்றன. காலை 10.20 நிலவரப்படி அந்நிறுவனப் பங்குகள் 158.80 புள்ளிகள் (11.43%) சரிந்து 1,230.40 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 2.4%-மும், கடந்த மூன்று மாதங்களில் 6.17%-மும், கடந்த ஒரு வருடத்தில் 20%-மும் பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்திருக்கின்றன அந்நிறுவனப் பங்குகள். கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளின் போது ஒரு வருடத்தில் மிகக் குறைவாக 1,355.5 ரூபாய் என்ற அளவிலேயே வர்த்தமாகி வந்தது இன்ஃபோசிஸ். இன்று அந்த நிலைக்கும் குறைவாக, மேலும் சரிவைச் சந்தித்திருக்கிறது.