NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சடலமாக மீட்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சடலமாக மீட்பு

    ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சடலமாக மீட்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 09, 2024
    12:05 pm

    செய்தி முன்னோட்டம்

    க்ளீவ்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் முதுகலைப் படிப்பிற்காக 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயது மாணவர் சடலமாக மீட்கப்பட்டதாக நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

    முகமது அப்துல் அர்பாத் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகக் காணாமல் போயிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பேசி இருந்த இந்திய துணைத் தூதரகம், அப்துலின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவரைக் கண்டுபிடிக்க உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியிருந்தது.

    இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

     அமெரிக்கா 

    "அர்பாத்தின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்": இந்திய தூதரகம்

    "தேடப்பட்டு வந்த திரு. முகமது அப்துல் அர்பாத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் இறந்து கிடந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். திரு முகமது அர்பாத்தின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

    "இந்திய தூதரகம், திரு முகமது அப்துல் அர்பாத்தின் மரணம் குறித்து முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக உள்ளூர் ஏஜென்சிகளுடன் தொடர்பில் உள்ளது. அவரது அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்," என்று தூதரகம் மேலும் கூறியுள்ளது.

    உயிரிழந்த மாணவர் கடைசியாக மார்ச் 7 ஆம் தேதி பேசியதாகவும், பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் அர்பத்தின் தந்தை முகமது சலீம் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்
    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்

    அமெரிக்கா

    யூடியூப் முன்னாள் CEOவின் மகன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்பு  உலகம்
    சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி மொபைல் ஆப்ஸ்
    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி? இந்தியா
    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு காவல்துறை

    உலகம்

    'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்  இந்தியா
    உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான் விமான நிலையம்
    வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம் பங்களாதேஷ்
    காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு  அமெரிக்கா

    உலக செய்திகள்

    போர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம்  இஸ்ரேல்
    தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப்  அமெரிக்கா
    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு
    குடும்ப சண்டை: அமெரிக்காவில் உள்ள இந்திய கோடீஸ்வரர் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவு அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025