செவ்வாய் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள்
இந்திய விஞ்ஞானிகள் தனி மின்காந்த அலைகளின் முதல் ஆதாரத்தை செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோமேக்னடிசம்(IIG) இதை கண்டறிந்துள்ளது. 'MAVEN' விண்கலத்தின் 'லாங்முயர் ப்ரோப்' மற்றும் 'வேவ்ஸ்' கருவிகளால் பதிவு செய்யப்பட்ட மின்சார புலத் தரவைப் பயன்படுத்தி செவ்வாய் காந்த மண்டலத்தில் உள்ள தனி அலைகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். செவ்வாய் காந்த மண்டலத்தில் தெரியும் இந்த அலைகள் அதன் தனித்த மின்புல ஏற்ற இறக்கங்களை காட்டுகிறது.
தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்த தனி மின்காந்த அலைகள், துகள் ஆற்றல், பிளாஸ்மா இழப்பு மற்றும் அலை-துகள் இடைவினைகள் மூலம் பிற துகள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். பூமி, சூரியனில் இருந்து வரும் சூரியக் காற்றை அயனியாக்குவதில் இருந்து பாதுகாக்கும் வலுவான காந்தப்புலத்தைக் கொண்டுள்ளது. அதை போல் அல்லாமல், செவ்வாய் கிரகமானது பலவீனமான காந்தப்புலத்தை மட்டுமே கொண்டுள்ளது. இது சூரியக் காற்றை செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. இந்த தனி அலைகளை அவதானிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் எழுத்துமுறையாக கூறியிருந்தாலும், இந்த அலைகளை இதற்கு முன்வரை கண்டறிய முடியவில்லை.