NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயிலை வடிவமைக்கிறது இந்திய ரயில்வே; விவரங்கள் இங்கே
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயிலை வடிவமைக்கிறது இந்திய ரயில்வே; விவரங்கள் இங்கே
    மாதிரி புகைப்படம்

    மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயிலை வடிவமைக்கிறது இந்திய ரயில்வே; விவரங்கள் இங்கே

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 28, 2024
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ரயில்வே அதிவேக ரயில் வளர்ச்சியில் தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூறினார்.

    சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) BEML உடன் இணைந்து வடிவமைக்கப்படும் இந்த ரயில், 280 kmph வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

    மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வ பதிலின் போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

    இந்த முயற்சியானது "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்களின் வெற்றியைப் பின்தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட ரயில்களை உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துகிறது.

    விவரங்கள்

    ₹28 கோடி பொருட்செலவில் ரயில் வடிவமைப்பு 

    வைஷ்னாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு ரயில் பெட்டியும் தயாரிக்க தோராயமாக ₹28 கோடி செலவாகும்.

    "உலகளவில் உள்ள மற்ற அதிவேக ரயில் பெட்டிகளுடன் ஒப்பிடும்போது உற்பத்தி செலவு கணிசமாகக் குறைவு" என்று அமைச்சர் கூறினார். "அதிவேக ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஒரு சிக்கலான மற்றும் தொழில்நுட்ப-தீவிர செயல்முறையாகும்" என்றும் வைஷ்ணவ் கூறினார்.

    தொழில்நுட்ப அம்சங்களை எடுத்துரைத்த அமைச்சர், திட்டத்தின் சவால்களை விவரித்தார்.

    "ஏரோடைனமிக் மற்றும் காற்று புகாத கார் உடல் வடிவமைப்பு, அதிவேக பயன்பாடுகளுக்கான மேம்பட்ட உந்துவிசை அமைப்புகள் மற்றும் எடை மேம்படுத்தல் ஆகியவை இதில் அடங்கும்" என்று அவர் விளக்கினார்.

    அம்சங்கள்

    புதிய அதிவேக ரயிலின் முக்கிய அம்சங்கள்

    ரயில் பெட்டிகள் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் எனவும் அவர் கூறினார். இந்த புதிய அதிவேக ரயிலில் கீழ்கண்ட அம்சங்கள் முக்கியமாக இடம்பெறும்: -

    ஏரோடைனமிக் வெளிப்புறம்

    சீல் செய்யப்பட்ட கேங்க்வேகள் மற்றும் தானியங்கி கதவுகள்

    காலநிலை கட்டுப்பாட்டுக்கான அதிநவீன HVAC அமைப்புகள்

    சிசிடிவி கண்காணிப்பு, மொபைல் சார்ஜிங் போர்ட்கள் மற்றும் தீ பாதுகாப்பு உபகரணங்கள்.

    "இந்த ரயில் பெட்டிகள் உகந்த பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிறந்த-இன்-கிளாஸ் அம்சங்களைக் கொண்டிருக்கும்" என்று வைஷ்ணவ் மேலும் கூறினார்.

    விரிவான வடிவமைப்பு தயாரானதும், திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு இறுதி செய்யப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை

    இந்திய ரயில்வே

    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! தெற்கு ரயில்வே
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை தெற்கு ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்! தெற்கு ரயில்வே

    நாடாளுமன்றம்

    "இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    '2024 பொது தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்': அமித்ஷா மக்களவை
    தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025