வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2
செய்தி முன்னோட்டம்
வரலாற்று நிகழ்வு: 1980இல், இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.
அதன்பிறகு, எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில், சீக்கிய தீவிரவாதிகளின் நடமாட்டம் பஞ்சாப்பில் அதிகரித்தது.
1984இல், ஆயுதமேந்திய சீக்கிய தீவிரவாதிகளை வெளியேற்றுவதற்காக பஞ்சாபில் உள்ள ஒரு சீக்கிய கோவிலில் இராணுவத் தாக்குதல் நடத்த இந்திரா காந்தி உத்தரவிட்டார்.
அந்த இராணுவத் தாக்குதலுக்கு பிறகு, இந்திரா காந்திக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தன.
அப்போது, இந்திரா காந்தியின் நீண்டகால மெய்க்காப்பாளராக இருந்த பியாந்த்-சிங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற பேச்சு அடிபட்டது. அவர் ஒரு சீக்கியராக இருந்ததே இதற்கு காரணமாகும்.
ஆனால், இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளரின் மீது இருந்த நம்பிக்கையால் அந்த இடமாற்ற உத்தரவை தனிப்பட்ட முறையில் ரத்து செய்தார்.
details
இந்திரா காந்திக்கு பிறகு, ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றார்
ஆனால், அதுதான் அவர் செய்த பெரும் தவறு என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை.
1984-அக்டோபர் 31ஆம் தேதி இந்திரா காந்தியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகிய இருவரும் இணைந்து இந்திரா காந்தியை சரமாரியாக சுட்டு கொன்றனர்.
அவர்கள் இருவரும் அங்கேயே சரணடைந்துவிட்டனர். ஆனால் அடுத்தடுத்து நடந்த கைகலப்பில் பியாந்த் சிங் சுட்டு கொல்லப்பட்டார்.
உயிர் பிழைத்த சத்வந்த் சிங் 1986ஆம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 1989ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
இந்த படுகொலையைத் தொடர்ந்து, புது டெல்லியில் கலவரம் வெடித்தது.
இரண்டு நாட்கள் நடந்த கண்மூடித்தனமான தாக்குதல்களில் 1,000 அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திரா காந்திக்கு பிறகு, அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றார்.