சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்க இருக்கும் பெண் அதிகாரிகள்
இந்திய ராணுவம் முதல் முறையாக பெண் அதிகாரிகளை உயர் அதிகார பதவிகளில் நியமிக்கவுள்ளது. 50 பெண் அதிகாரிகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எல்லை பகுதிகளில் தலைமை தாங்க உள்ளனர் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இது ராணுவ பதவிகளில் பாலின சமத்துவத்தை கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாகும். லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்த 108 பெண் அதிகாரிகள் கர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டு நிரந்தர கமிஷன் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. பணியமர்த்தப்பட்ட பெண் அதிகாரிகள் அனைவரும் 1992-2006க்கு இடையில் ராணுவத்தில் சேர்ந்தவர்கள் ஆவர்.
வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் இந்திய ராணுவம் சமீபத்தில் சிறப்பு எண்-3 காலியிடங்களை அறிவித்தது. அப்போது மொத்தம் 60 பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் தேர்வு வாரியத்திற்கு பார்வையாளர்களாக அழைக்கப்பட்டனர். நியாயமான நடத்தையை உறுதிப்படுத்தவும், அவர்களின் அச்சங்கள் ஏதேனும் இருந்தால் தெளிவுபடுத்தவும் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் அதிகாரிகள் இது போன்ற ராணுவ உயர் பதவிகளில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.