Page Loader
ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு
"பணி என்பது அனைவருக்கும் சமம். இதில் பாலின வேறுபாடுகள் இருக்கக்கூடாது" -நீதிபதிகள்

ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Sindhuja SM
Dec 13, 2022
05:28 pm

செய்தி முன்னோட்டம்

ராணுவத்தில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ராணுவத்தில் ஆண் பெண்களுக்கு இடையில் அதிகம் பாரபட்சம் பார்க்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 34 பெண் அதிகாரிகள் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கைப் போட்டவர்கள். ராணுவத்தில் பதவி உயர்வுக்கு நடத்தப்படும் தேர்வு வாரியத்திற்கு பெண் அதிகாரிகள் பரிசீலிக்க படுவதில்லை என்பது தான் இந்த 34 பெண் அதிகாரிகளின் குற்றச்சாட்டு.

10 Dec 2022

எதற்காக இந்த வழக்கு?

இவர்கள் தரப்பு வாதத்தின் முக்கிய புள்ளிகள்: சுமார் 249 பெண் அதிகாரிகள் கர்னல் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற போதிலும் கடந்தமுறை நடத்தப்பட்ட SB3 ,SB2 தேர்வு வாரியங்களில் பெண் அதிகாரிகள் யாருக்குமே பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இளைய ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும் போது பெண் ராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதை விசாரித்த நீதிபதிகள், "பணி என்பது அனைவருக்கும் சமம். இதில் பாலின வேறுபாடுகள் இருக்கக்கூடாது. இந்த பிரச்சனைத் தீரும் வரை SB3யில் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்." என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.