சென்னை ஏர்ஷோ நேரலை: இந்திய விமானப்படையின் மெகா சாகச நிகழ்ச்சி தொடங்கியது
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) 11 மணிக்கு தொடங்கியது. 11 மணி முதல் 1 மணி வரை நடக்கும் இந்த விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்கும் விமானங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து அடையாறில் உள்ள இந்திய கடற்படை நிலையம் நோக்கி பறக்கும். சூலூர், தஞ்சாவூர், அரக்கோணம், பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்கின்றன. இவற்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் மற்றும் சுகோய் 30, ஆகாஷ் கங்கா குழு, சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழு, ரஃபேல் உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் பங்கேற்கின்றன.