
பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 உயிர்களைக் கொன்ற கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா ராஜாங்க ரீதியில் தொடர்ச்சியான வலுவான பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
அவற்றில் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமாக எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பரந்த அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
முன்னதாக, ஏப்ரல் 23 தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து கூடிய CCS, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை வெளிப்படையாக நிறுத்தும் வரை, 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட விரிவான முடிவுகளை அறிவித்தது.
நடவடிக்கைகள்
இந்தியாவின் நடவடிக்கைகள்
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையரகத்தில் உள்ள அனைத்து ராணுவ ஆலோசகர்களையும் இந்தியா வெளியேற்றியுள்ளது.
மேலும் இஸ்லாமாபாத்தில் இருந்து தனது பாதுகாப்புப் பணியாளர்களை பரஸ்பரம் திரும்பப் பெறும்.
ஒரு செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதன்படி, இரு நாடுகளும் மே 1 ஆம் தேதிக்குள் தூதரக ஊழியர்களை 55 இல் இருந்து 30 ஆகக் குறைக்கும்.
மேலும் பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா விலக்கு திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே தரைவழி கடக்கும் அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை இந்தியா மூடியுள்ளது.