தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா
செய்தி முன்னோட்டம்
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 'தி இந்தியா டயலாக்' அமர்வில் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(பிப் 24) பேசினார்.
நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொண்டதன் மூலம் இந்தியாவால் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று அவர் தனது உரையில் கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசி பிரச்சாரம் 18.3 பில்லியன் டாலர் இழப்பைத் தடுத்து பொருளாதாரத்தையும் காப்பாற்றியுள்ளது என்று மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.
கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரத்தின் செலவைக் கணக்கிட்டதில், 15.42 பில்லியன் டாலர் நிகர பலனை இந்தியா கண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
இந்தியா
திறம்பட வேலை செய்த இந்திய அரசாங்கம்
ஜனவரி 2020இல் உலக சுகாதார அமைப்பால்(WHO) கோவிட்-19, பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் இந்தியாவால் எடுக்கப்பட்டது என்று மாண்டவியா கூறியுள்ளார்.
தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்த 'தி இந்தியா டயலாக்' அமர்வில் அவர் இன்று(பிப் 24) மெய்நிகராக உரையாற்றினார்.
29 மார்ச் 2020 முதல், மருந்துகள், தடுப்பூசிகள், தளவாடங்கள் போன்ற தொற்றுநோய் மேலாண்மையின் பல்வேறு அம்சங்களில் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்துவதற்காக 11 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களை இந்திய அரசாங்கம் விரைவாக அமைத்தது என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜியின் தலைமையில் இந்தியா, திறம்பட நிர்வகிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.