
இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் - பெங்களூரில் திறப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முதல் 3டி-தொழில்நுட்பம் கொண்ட தபால் நிலையம் பெங்களூர் கேம்ப்ரிட்ஜ் லே-அவுட் பகுதியில் அமைந்துள்ளது.
1100 சதுரடி பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக இந்த தபால் நிலையமானது கட்டப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இந்த அதிநவீன தபால்நிலையத்தினை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று(ஆகஸ்ட்.,18) திறந்து வைத்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,'இது நமக்கு மிகப்பெரும் பெருமை மிகுந்த தருணம். 3டி தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை செய்துள்ளது என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் வகையில் அமைந்துள்ள இந்த தபால் நிலையம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் புதுமைக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு"என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இதன் கட்டுமானத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
3டி தொழில்நுட்ப தபால் நிலையம்
#Watch | நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் 3D பிரின்டிங் முறையில் கட்டப்பட்ட தபால் நிலையத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்!#SunNews | #Bengaluru | #3DPrintingPostOffice pic.twitter.com/DQQ4v1DH8a
— Sun News (@sunnewstamil) August 18, 2023