NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: நேற்றில் இருந்து 30% அதிகரிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: நேற்றில் இருந்து 30% அதிகரிப்பு 
    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,86,160) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: நேற்றில் இருந்து 30% அதிகரிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 13, 2023
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஏப்-12) 7,946ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 10,158ஆக உயர்ந்துள்ளது.

    8 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    நாட்டின் செயலில் உள்ள கொரோனா 44,998 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.10 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,86,160) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,035ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 19 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கி இருப்பதால், அடுத்த 10-12 நாட்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும், அதன் பிறகு நோய்த்தொற்றுகள் குறையும் என்றும் அரசாங்கம் நேற்று தெரிவித்தது.

    details

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,10,127ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 5,356 பேர் குணமடைந்துள்ளனர்.

    தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 4.42 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 4.02 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.71 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 2,29,958 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,24,653 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 327 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    இந்தியா

    மனிதர்களின் உடல்நலத்திற்கு கோமியம் உகந்ததல்ல - இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் மருத்துவ ஆராய்ச்சி
    ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி  மத்திய பிரதேசம்
    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவுக்காக 4வது பதக்கம் வென்ற விகாஸ் இந்திய அணி
    இனி தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை: கர்நாடக பாஜகவின் கேஎஸ் ஈஸ்வரப்பா முடிவு  கர்நாடகா

    கொரோனா

    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு சென்னை
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,300 பாதிப்புகள் இந்தியா
    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல் கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025