Page Loader
தலாய் லாமா வாரிசுக்கு சீனாவின் அங்கீகாரம் தேவையில்லை; சீன அரசின் கருத்தை உறுதியாக நிராகரித்தது இந்தியா
தலாய் லாமா வாரிசுக்கு சீன அரசின் அங்கீகாரம் தேவையில்லை

தலாய் லாமா வாரிசுக்கு சீனாவின் அங்கீகாரம் தேவையில்லை; சீன அரசின் கருத்தை உறுதியாக நிராகரித்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Jul 03, 2025
02:08 pm

செய்தி முன்னோட்டம்

தலாய் லாமாவின் அடுத்த மறுபிறவியை சீன அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற சீனாவின் கூற்றை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது. இந்த முடிவு திபெத்திய ஆன்மீகத் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் மட்டுமே உள்ளது என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள தர்மசாலா சென்றுள்ள மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, தலாய் லாமா திபெத்தியர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியை வகிக்கிறார் என்றும், அவரது வாரிசைத் தீர்மானிக்கும் அதிகாரம் முற்றிலும் அவரிடமே உள்ளது என்றும் கூறினார்.

தலாய் லாமா 

தலாய் லாமா வாரிசு குறித்து அறிவிப்பு

பல நூற்றாண்டுகள் பழமையான தலாய் லாமாவின் நிறுவனம் அவரது வாழ்நாளுக்குப் பிறகும் தொடரும் என்று தலாய் லாமாவின் அலுவலகம் மீண்டும் உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது. தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ அலுவலகமான காடன் ஃபோட்ராங் அறக்கட்டளை, அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிப்பதற்கான செயல்முறை 2011 ஆம் ஆண்டு அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிப்புற தலையீட்டிற்கு எந்தப் பங்கும் கிடையாதும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், எந்தவொரு மறுபிறவியும் சீன சட்டங்களுக்கு இணங்க வேண்டும் மற்றும் சீன அரசின் ஒப்புதலின் கீழ் அதன் எல்லைகளுக்குள் நிகழ வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை சீனா நீண்டகாலமாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.

கைப்பாவை

தலாய் லாமாவை கைப்பாவையாக்கும் முயற்சி

1950 களில் ஆக்கிரமித்து கொண்ட திபெத்தின் மீது தனது பிடியை இறுக்க ஒரு கைப்பாவை தலாய் லாமாவை நிறுவ சீனா மேற்கொண்ட முயற்சியாக இது இருக்கலாம் என்று நாடுகடத்தப்பட்ட திபெத்திய சமூகங்கள் அஞ்சுகின்றன. சீன ஆட்சிக்கு எதிரான தோல்வியுற்ற கிளர்ச்சியைத் தொடர்ந்து 1959 இல் லாசாவை விட்டு வெளியேறியதிலிருந்து தலாய் லாமா இந்தியாவிற்கு தப்பி வந்து வாழ்ந்து வருகிறார். சீனாவால் பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்பட்ட போதிலும், அவர் அகிம்சை மற்றும் திபெத்திய மக்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தின் உலகளாவிய அடையாளமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.