Page Loader
துருக்கியின் எதிரி கிரீஸ் நாட்டிற்கு குரூஸ் ஏவுகணையை கொடுக்க இந்தியா முடிவு என தகவல்
துருக்கியின் எதிரிக்கு குரூஸ் ஏவுகணையை கொடுக்க இந்தியா முடிவு என தகவல்

துருக்கியின் எதிரி கிரீஸ் நாட்டிற்கு குரூஸ் ஏவுகணையை கொடுக்க இந்தியா முடிவு என தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 10, 2025
07:50 pm

செய்தி முன்னோட்டம்

கிரீஸ் நாட்டிற்கு இந்தியாவின் உள்நாட்டு நீண்ட தூர தரையிலிருந்து தாக்கும் குரூஸ் ஏவுகணை (LR-LACM) வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் எதிரியாக பார்க்கப்படும் கிரீஸ் நாட்டிற்கு இந்தியா ஏவுகணை வழங்குவது, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு துருக்கி கொடுக்கும் ஆதரவுக்கு பதிலடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய அரசு தரப்பில் இருந்து இந்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வகையில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே நேரம் ஏதென்ஸில் நடந்த DEFEA 2025 பாதுகாப்பு கண்காட்சியின் போது இந்த திட்டம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியா-கிரீஸ் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துகிறது.

துருக்கி

துருக்கி ஊடக அறிக்கை

துருக்கிய பழமைவாத ஊடக நிறுவனமான டிஆர்ஹீபர் இந்த ஏவுகணை வழங்கும் முடிவை இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி அளித்த ஆதரவுடன் நேரடியாக இணைத்து, இது இந்தியாவின் அளவீடு செய்யப்பட்ட பதிலடி என்று கூறியது. இந்தியாவின் டிஆர்டிஓவால் உருவாக்கப்பட்ட LR-LACM, 1,500 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய ஒரு துணை ஒலி ஏவுகணையாகும். இது ரேடாரைத் தவிர்த்து, ரஷ்ய எஸ்-400 போன்ற மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் திறன் கொண்டது என்பதால் இது துருக்கி எர்டோகன் அரசின் தூக்கத்தைக் கொடுத்துள்ளது. கிரீஸ் மட்டுமல்லாது துருக்கியுடன் எல்லை பிரச்சினையைக் கொண்டுள்ள சைப்ரஸ் மற்றும் ஆர்மீனியாவுடன் இந்தியா பாதுகாப்பு கூட்டாண்மைகளை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.