தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நாளை நடைபெறுகிறது இண்டியா கூட்டணி கட்சிகளின் பெரும் கூட்டம்
மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாளை இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பெரும் கூட்டத்தை நடத்த உள்ளதாக, வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 1-ம் தேதி தேர்தல் கருத்துகணிப்புகள் அறிவிக்கப்பட்ட பிறகு அரசியல் வியூகம் குறித்து விவாதிக்கவும், ஆலோசனை நடத்தவும் இந்த கூட்டத்தை கூட்ட முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இண்டியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மாலை அல்லது புதன்கிழமை காலை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 1 அன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் பல இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர்.
ஜூன் 1ஆம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி கட்சி, சிபிஐ(எம்), சிபிஐ, திமுக, ஜேஎம்எம், ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சிவசேனா (யுபிடி) மற்றும் என்சிபி (சரத் பவார்) ஆகிய கட்சிகளும் அந்த கூட்டத்தில் பங்கேற்றன. சரத் பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், அனில் தேசாய், சீதாராம் யெச்சூரி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், சஞ்சய் சிங், ராகவ் சதா, சம்பை சோரன், கல்பனா சோரன், டி ஆர் பாலு, ஃபரூக் அப்துல்லா, டி ராஜா, திபங்கரித் பட்டாச்சார்யா மற்றும் ஜேடி ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.