
தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை; மம்தா பங்கெடுக்கவில்லை
செய்தி முன்னோட்டம்
எதிர்க்கட்சி கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) பிளாக், இன்று தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையை துவக்கியுள்ளது.
காணொளி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுக சார்பில், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.
மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸின் வரவிருக்கும் பாரத் ஜோடோ நீதி யாத்திரை குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
வரவுள்ள லோக்சபா தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தா பானர்ஜி , அரசு பணிகள் காரணமாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என பிடிஐ தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை
#BREAKING | இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கியது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
— Sun News (@sunnewstamil) January 13, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்வை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.#SunNews | #INDIA | #CMStalin