
"கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா
செய்தி முன்னோட்டம்
காஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட வழக்கில், இந்தியா "குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான" ஆதாரங்களை கேட்பதாகவும், ஆதாரங்களை வழங்குவது கனடா விசாரணையை நெருங்குவதற்கு உதவும் எனவும் இந்திய தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், வேறுபாடுகளை மறந்து இந்தியா- கனடா ஒன்றிணைய வேண்டும் எனவும், இந்தியா வணிக உறவுகளுக்கு இன்னும் தயாராக உள்ளதாகவும், கனடாவை இந்தியாவிற்கு வணிக பிரதிநிதிகளை அனுப்புமாறு வலியுறுத்தினார்.
டொராண்டோவில் டிஏஜி தொலைக்காட்சிக்காக கனடிய பத்திரிகையாளர் தாஹிர் கோராவுடனான நேர்காணலில்,
"இந்தியா குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான தகவல்களை மட்டுமே கேட்கிறது, அதனால் நாங்கள் உங்களுக்கு உதவமுடியும்" என்றார்.
௨ந்ட card
வர்த்தகம் குறித்து பேசிய இந்திய தூதர்
தொடர்ந்து பேசியவர், கனடாவிடம் இந்தியா தெரிவித்து வரும் கவலைகளை கனடா புரிந்து கொண்டாலும், அவற்றை போக்குவதற்கான வேலைகளை கனடா செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் வர்த்தகம் குறித்து பேசியவர், வர்த்தகம் என்பது இரு நாடுகளை ஒன்றிணைக்கும் எனவும், இந்தோ-கனடிய சமூகம் மற்றும் பரந்த கனேடிய சமூகத்தில் உள்ளவர்கள்,
பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியாவின் புதுமையான வளர்ச்சியைப் பயக்கும் வகையில் வர்த்தகம் செய்ய பரிந்துரைத்தார்.
அதேபோல், பரஸ்பர கவலைகளை புரிந்து கொள்ளாமல், எந்த ஒரு சர்வதேச உறவும் உறுதியானதாக இருக்க முடியாது என, அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
௩ர்ட கார்டு
இந்தியா கனடா உறவில் ஏற்பட்ட விரிசல்
இந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி, கனடாவில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதியும், இந்திய அரசால் தேடப்படும் நபருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான, நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பர் மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்த இந்தியா, இதை "அபத்தமானது" மற்றும் "உள்நோக்கம் உடையது" எனக் கூறியிருந்தது. மேலும், இது குறித்த ஆதாரங்களையும் கேட்டு வந்தது.
இந்த விவகாரம் இரு நாட்டு உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்த, இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை திரும்ப பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.