கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த தொற்று பாதிப்பால் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒருவரும், கேரளா மாநிலத்தில் 2 பேர் என மொத்தம் 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்னும் தகவல் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் தற்போது 4,091 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
கொரோனா
எளிதில் பரவக்கூடிய ஜெ.என். 1 வகை வைரஸ்
அதேபோல் கொரோனா பரவ துவங்கிய காலகட்டத்திலிருந்து தற்போதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4,44,74,246 என்றும் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனவால் 5,33,351 உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது அதிகம் பரவும் கொரோனாவின் மற்றொரு திரிபான ஜே.என்.1 வகை வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்றும்,
இந்த வைரஸ் முதலில் குளிர், காய்ச்சல் போன்ற சிறுசிறு அறிகுறிகள் கொண்டு காணப்பட்டு, பின்னர் சுவாசக்குழாயில் பாதிப்பினை ஏற்படுத்த கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய(டிச.,28)நிலவரம் வரையிலான தகவல்படி, கொரோனா ஜே.என்.1 வகை திரிபு வைரஸால் 145 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.