Loading...
வங்கக்கடலில் சூறாவளிப் புயல்: தமிழ்நாடு, ஆந்திராவுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, ஆந்திராவுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் சூறாவளிப் புயல்: தமிழ்நாடு, ஆந்திராவுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
10:37 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, அக்டோபர் 26 ஆம் தேதி காலையில் புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது. இந்த புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத் தென்னிந்திய மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் மேலும் தீவிரமடையவுள்ளது.

கனமழை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகாவில் கனமழை எச்சரிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

அக்டோபர் 24 முதல் 26 வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலான பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும் அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மீண்டும் மழை அதிகரிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கடலோர மாநிலங்கள்

ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கனமழை

உருவாகி வரும் புயலின் தாக்கத்தால் கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் பகுதிகளில் அக்டோபர் 25 முதல் 28 வரையிலும், ஒடிசாவில் அக்டோபர் 26 முதல் 28 வரையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஒடிசா மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் பலத்த சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அக்டோபர் 28 முதல் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கையும் கடலோரக் கட்டுப்பாடுகளும்

வங்கக்கடலில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், அக்டோபர் 26 ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் கரையைக் கடக்கும் பகுதிகள் மற்றும் மழைப்பொழிவு குறித்து தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கடலோர மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT