NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தாண்டு வெப்பமான குளிர்காலம், குறைவான குளிர் அலை நாட்கள் இருக்கும்: IMD கணிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தாண்டு வெப்பமான குளிர்காலம், குறைவான குளிர் அலை நாட்கள் இருக்கும்: IMD கணிப்பு
    டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இயல்பை விட அதிகமான வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது

    இந்தாண்டு வெப்பமான குளிர்காலம், குறைவான குளிர் அலை நாட்கள் இருக்கும்: IMD கணிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 04, 2024
    06:48 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்தாண்டு இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் இருக்குமென கணித்துள்ளது.

    டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இயல்பை விட அதிகமான வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தாண்டு நவம்பர் மாதம், 1901 க்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது வெப்பமான நவம்பராகவும், 123 ஆண்டுகளில் வடமேற்கு இந்தியாவின் வெப்பமான நவம்பர் மாதமாகவும் பதிவு செய்யப்பட்டது.

    இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வரலாறு காணாத இரவு நேர மற்றும் சராசரி வெப்பநிலையுடன் கூடிய வெப்பமான அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வருகிறது.

    வானிலை முன்னறிவிப்பு

    வரவிருக்கும் குளிர்காலத்திற்கான வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு கணிப்புகள்

    குளிர்கால மாதங்களில் பெரும்பாலான பிராந்தியங்கள் இயல்பை விட குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் காணும் என்றும் IMD கணித்துள்ளது.

    இருப்பினும், தென் தீபகற்ப இந்தியாவில் இயல்பான வெப்பநிலை முதல் இயல்பை விட குறைவான அதிகபட்ச வெப்பநிலை வரை இருக்கலாம்.

    மேலும், குளிர் அலை நாட்களின் எண்ணிக்கை இயல்பை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கமான ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு பதிலாக இரண்டு முதல் நான்கு நாட்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.

    வானிலை வடிவங்கள்

    வெப்பமான சூழ்நிலைகளுக்குப் பின்னால் மேற்கத்திய இடையூறுகள் இல்லாதது கரணம்

    மேற்கத்திய இடையூறுகள் இல்லாதது வெப்பமான சூழ்நிலைக்கு ஒரு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    IMD இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், இந்த காலகட்டத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைந்தபட்ச வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

    "நாட்டின் வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் குளிர் அலை நாட்கள் குறைவாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

    மழை முன்னறிவிப்பு

    குளிர்காலத்திற்கான மழைப்பொழிவு முறைகள் மற்றும் குறைபாடுகள்

    தீபகற்ப இந்தியா, மேற்கு-மத்திய இந்தியா மற்றும் கிழக்கு-மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளுக்கு இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு கணிக்கப்பட்டுள்ள நிலையில், மழைப்பொழிவு முறைகளும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் இயல்பான மழை முதல் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும்.

    நவம்பர் 2024 இல், குறிப்பாக வடமேற்கு இந்தியாவில் 79.9% பற்றாக்குறையைப் பதிவு செய்த ஒரு பெரிய மழைப் பற்றாக்குறையை IMD சுட்டிக்காட்டியது.

    இந்த வறண்ட வானிலை இந்த பிராந்தியங்களில் டிசம்பரில் தொடரும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குளிர்காலம்
    வானிலை ஆய்வு மையம்
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    உங்கள் இணைய செயல்பாட்டை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கண்காணிப்பதை தடுப்பது  எப்படி ? இதைத் தெரிந்து கொள்ளுங்கள் மெட்டா
    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி

    குளிர்காலம்

    குளிர்கால சங்கிராந்தி 2022: இன்று ஆண்டின் மிகக் குறுகிய நாள்! உலகம்
    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காற்று மாசுபாடு
    குளிர்காலத்தில் எடை கூடுகிறது என்ற கவலையா? உங்களுக்கு உதவ சில குறிப்புகள் குளிர்கால பராமரிப்பு
    மழைக்காலத்தை இதமாக்கும் 4 பானங்கள் குளிர்கால பராமரிப்பு

    வானிலை ஆய்வு மையம்

    15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கு மத்தியிலும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கனமழை
    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழக அரசு
    அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை வானிலை அறிக்கை

    வானிலை அறிக்கை

    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    இந்தியாவில் தொடர்ந்து 6வது ஆண்டாக 'இயல்பான மழை பொழிவு' பதிவாகியுள்ளது மழை
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை

    வானிலை எச்சரிக்கை

    இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு வானிலை அறிக்கை
    ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் பருவமழை
    கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல் பள்ளிகளுக்கு விடுமுறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025