Page Loader
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 06, 2024
08:57 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து IMD வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல்11-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல்,பலத்த காற்றுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

கனமழை எச்சரிக்கை

ட்விட்டர் அஞ்சல்

கனமழை எச்சரிக்கை