அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு (KTCC) ஆகிய நான்கு மாவட்டங்களில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரண்டு நாட்களுக்கு மிக கன மழைக்கான 'ஆரஞ்ச்' அலெர்ட் வெளியாகியுள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று, டிசம்பர் 17ஆம் தேதி கனமழை பெய்யும் எனவும், செங்கல்பட்டில் சில இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் 20 செ.மீ. அளவிற்கு மழை பெய்யக்கூடும் என்பதால் 'ஆரஞ்ச்' அலெர்ட் வழங்கப்பட்டுள்ளது. நாளை, சென்னையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச்' அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.