LOADING...
மீண்டும் அதிகரிப்பு! இன்றைய தங்கம் வெள்ளி விலை எவ்வளவு?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

மீண்டும் அதிகரிப்பு! இன்றைய தங்கம் வெள்ளி விலை எவ்வளவு?

எழுதியவர் Sekar Chinnappan
May 07, 2026
10:40 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மே 7) அதிகரித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 அதிகரித்து ₹14,150 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 அதிகரித்து ₹1,13,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹54 அதிகரித்து ₹15,436 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 அதிகரித்து ₹1, 24,458 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று (மே 7) அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹40 அதிகரித்து ₹11,810 ஆகவும், ஒரு சவரன் ₹320 அதிகரித்து ₹94,480 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹275.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,75,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement