LOADING...
தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2025
03:56 pm

செய்தி முன்னோட்டம்

தென் தமிழகம் மற்றும் உள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் 17 மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகை, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, புதுச்சேரி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஆறுகள், நீர்த்தேக்கப் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை

கனமழைக்கான காரணம்

தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியே இந்தக் கனமழைக்கு முக்கியக் காரணமாகும். இந்தப் பருவமழை காரணமாக, மேற்கண்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகங்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement