Loading...
"மாணவராகவே மாறிட்டாரே!" ஐஐடி சென்னை இயக்குநர் வி.காமகோடி செய்த சுவாரசியமான பிராங்க்! வைரல் வீடியோ
ஐஐடி சென்னை இயக்குநர் வி.காமகோடி செய்த சுவாரசியமான பிராங்க்

"மாணவராகவே மாறிட்டாரே!" ஐஐடி சென்னை இயக்குநர் வி.காமகோடி செய்த சுவாரசியமான பிராங்க்! வைரல் வீடியோ

எழுதியவர் Sekar Chinnappan
Jul 27, 2026
03:42 pm

செய்தி முன்னோட்டம்

ஐஐடி சென்னையின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த முதலாண்டு மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் வகையில் சுவாரசியமான பிராங்க் ஒன்ற செய்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தான் ஒரு கல்வி நிறுவனத்தின் உயரிய பதவியில் இருக்கும் இயக்குநர் என்பதை காட்டிக் கொள்ளாமல், தானும் ஒரு புதிய மாணவரை போல சாதாரண உடையில் வந்து மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஆச்சரிய தருணம்

மாணவர்களுடன் இயல்பாக பேசி ஆச்சரியப்படுத்திய தருணம்

புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறைக்குள் சாதாரண உடையில் நுழைந்த இயக்குநர் காமகோடி, அங்கிருந்த மாணவர்களிடம் மிகவும் இயல்பாக பேசிப் பழகியுள்ளார்.

வகுப்பறையில் இருந்த பிற மாணவர்கள் அவரைத் தங்களில் ஒரு புதிய மாணவர் என்றே நினைத்து உரையாடியுள்ளனர்.

பின்னர் தான் யார் என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தியபோது, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் பெரும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் திளைத்தனர்.

வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகும் பிராங்க் வீடியோ

இயக்குநர் வி.காமகோடி மாணவர்களுடன் நடத்திய இந்த சுவாரசியமான பிராங்க் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று மிக வேகமாக வைரலாகி வருகிறது.

நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர், எவ்வித பந்தாவும் இன்றி மாணவர்களுடன் இதுபோன்று நட்பாகப் பழகி அவர்களை வரவேற்பது மிகவும் பாராட்டுக்குரியது என நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

மன அழுத்தம்

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி

பொதுவாக நாட்டின் முன்னணி ஐஐடி நிறுவனங்களில் சேரும் முதலாண்டு மாணவர்களுக்குப் புதிய சூழல் மற்றும் கல்விசார்ந்த மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம்.

அதனைத் தவிர்க்கும் விதமாகவும், கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அணுகக்கூடியவர்களே என்பதை உணர்த்தும் விதமாகவும் இயக்குநர் இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்.

இத்தகைய அணுகுமுறை புதிய மாணவர்களிடையே பயத்தை போக்கி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அணுகுமுறை

நிறுவனத்தில் நல்லுறவை மேம்படுத்தும் புதிய அணுகுமுறை

ஐஐடி சென்னை இயக்குநர் வி.காமகோடியின் இந்த எளிமையான மற்றும் சுவாரசியமான செயல், பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க உதவும் என்று கல்வி ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மாணவர்கள் தங்களது பிரச்சனைகளைத் தைரியமாகத் தலைமை நிர்வாகத்திடம் கொண்டு செல்ல இத்தகைய நிகழ்வுகள் பாலமாக அமையும் என்பதால், இந்த வீடியோ இணையத்தில் தொடர்ந்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT