Page Loader
இசைஞானி இளையராஜா பெயரில் ஐஐடியில் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கம்
9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது

இசைஞானி இளையராஜா பெயரில் ஐஐடியில் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2024
07:18 am

செய்தி முன்னோட்டம்

சென்னை ஐஐடியில், இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் ராஜ்ய சபா எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து 220 கலைஞர்கள் பங்கேற்று சிவ வாத்தியம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய கலைகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, ஐஐடி வளாகத்தில்,'மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்' அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இளையராஜா 

"இசை எனது மூச்சு"

விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும்போது, "கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக சிறுவயதில் 400 ரூபாயுடன் வந்தேன். இசை என்றால் என்னவென்று அப்போது எனக்கு தெரியாது". "இசையை கற்றுக்கொள்வதற்காக வந்த நான், இன்றைக்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. இசை எனது மூச்சாக மாறிவிட்டது. சென்னை ஐஐடியில் இருந்து 200இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை" என்றார்.

embed

Twitter Post

#NewsUpdate | "மூச்சு விடுவது போல இசை எனக்கு இயற்கையாக வருகிறது" - இளையராஜா, இசையமைப்பாளர்#SunNews | #Ilaiyaraaja | #IIT | @ilaiyaraaja pic.twitter.com/UELqHNfzqh— Sun News (@sunnewstamil) May 20, 2024