விமான டிக்கெட்டை ரத்து செய்ததற்கு ரூ.20 Refund! வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரியின் பதிவு
விமானப் பயணச்சீட்டு ரத்துசெய்யப்படுபோது, பயணிகள் திரும்பப் பெறும் தொகை குறைவாக இருக்கும். இருப்பினும், சில சமயங்களில் அந்தத் தொகை மிகக் குறைவானதாக, பயனற்றதாக இருக்கும்போது பயணிகளின் அதிருப்தியை பெறுகிறது. சமீபத்தில், பீகார் ஐஏஎஸ் அதிகாரி ராகுல் குமாருக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அவர் தனது விமான பயணத்தை ரத்து செய்த நிலையில், ரூ.20 திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்கிரீன்ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் குமார், தனது கிடைத்த தொகைக்கு ஏற்ற சரியான முதலீட்டுத் திட்டத்தை பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். ஸ்கிரீன்ஷாட்டில், அவர் ரூ.13,820க்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததையும், ரூ.20 திரும்ப பெறுவதையும் பார்க்க முடிகிறது. அவரது இந்த பதிவு நெட்டிசன்களிடையே வைரலாக, பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.