NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் 

    சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 27, 2024
    01:20 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மாணவர் கூட்டமைப்பு(SFI) உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரத்தில் தர்ணா நடத்தினார்.

    கொல்லத்தில் உள்ள நிலமேல் வழியாக ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் கான்வாய் சென்றபோது இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி காட்டினர்.

    அதனால் ஆத்திரமடைந்த கான், போராட்டங்களைக் கண்டு வாகனத்தில் இருந்து இறங்கி போராட்டக்காரர்களை எதிர்கொள்ள முயன்றார்.

    தகவலறிந்து, போலீசார் தலையிட்டு நிலைமையை சமாதானப்படுத்த முயன்றனர்.போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்த ஆளுநர் கான், போராட்டங்கள் குறித்து முன்னரே தகவல் அளித்தும் அவர்கள் ஏன் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    கஜடசவெ 

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயலாளரிடம் தகவல் தெரிவித்த ஆளுநர் 

    அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆளுநர் கான் அந்த இடத்தை விட்டு வெளியேற மறுத்தார்.

    போராட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகலை பெற்றுக் கொள்ளும் வரை அங்கிருந்து செல்லமாட்டேன் என்று கவர்னர் கான் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

    12 போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்த போதிலும், அதிகமான போராட்டக்காரர்கள் இருப்பதாகக் கூறிய கான், அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தாம் வெளியேறப் போவதில்லை என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

    அதிகாரிகள் வழங்கிய பட்டியலைக் காட்டிலும் பல்கலைக்கழக அமைப்புகளில் சங்பரிவார் உறுப்பினர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி SFI அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    கவர்னர்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கேரளா

    டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம்
    7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை திருவனந்தபுரம்
    கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு  காவல்துறை
    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு  கடத்தல்

    கவர்னர்

    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் தமிழ்நாடு
    புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு  புதுச்சேரி
    தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025