Page Loader
இது அந்த மாதிரி இடம் அல்ல; ஹைதராபாத் டிரைவரின் நோட்டீஸ் வைரல்
வைரலான ஹைதராபாத் டிரைவரின் நோட்டீஸ்

இது அந்த மாதிரி இடம் அல்ல; ஹைதராபாத் டிரைவரின் நோட்டீஸ் வைரல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 21, 2024
08:16 pm

செய்தி முன்னோட்டம்

ஹைதராபாத்தை சேர்ந்த கேப் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை ஒன்றை வைத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், சம்பந்தப்பட்ட காரில் ஏறியபோது, ​​டிரைவர் சீட்டின் பின்புறம் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதை கவனித்துள்ளார். அதில், "எச்சரிக்கை!! காதல் இல்லை. இது ஒரு வண்டி. உங்கள் தனிப்பட்ட இடம் அல்லது ஓயோ அல்ல, எனவே தயவுசெய்து இடைவெளி விட்டு அமைதியாக இருங்கள்." என்று கூறப்பட்டிருந்தது. வெங்கடேஷ் இதை படம்பிடித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பின்னர் ஹாய் ஹைதராபாத் என்ற எக்ஸ் கணக்கு பகிர அது வைரலானது. பல சமூக ஊடக பயனர்கள் இதற்கு வேடிக்கையாக பதிவிட, இது டிரெண்டிங் ஆகி விட்டது.

ட்விட்டர் அஞ்சல்

வைரல் போட்டோ