தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது
சேலம் மேட்டூர் அருகேயுள்ள கேம்ப் காந்திநகர் பகுதியினை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(50), பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி(37), இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 24ம் தேதி இருவருக்கும் மத்தியில் வழக்கம் போல் பிரச்சனை ஏற்பட, தமிழரசி உடலில் தின்னரை ஊற்றியுள்ளார். சிறிது நேரத்திலேயே அவர் எரிந்த நிலையில் அலறி துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீக்காயங்களுக்கான தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
தமிழரசி சிகிச்சை பலனின்றி நேற்று(டிச.,28)மாலை பரிதாபமாக உயிரிழந்தார்
இதனையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் தனது மரண வாக்குமூலத்தினை மாஜிஸ்திரேட் முன்னிலையில் அளித்துள்ளார். அதில் அவர், 'சம்பவ தினத்தன்று தற்கொலை செய்ய உடலில் தின்னரை நான் தான் ஊற்றிக்கொண்டேன், ஆனால் குழந்தைகள் குறித்த நினைவு வர, அம்முடிவை கைவிட்டு உடலில் தண்ணீர் ஊற்ற சென்றேன். அப்போது என் கணவர் தீயை பற்றவைத்து என்மீது போட்டுவிட்டார்' என்று கூறியுள்ளார். இந்நிலையில், தமிழரசி சிகிச்சை பலனின்றி நேற்று(டிச.,28)மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்ட கணவர் கொடுத்த பரபரப்பான வாக்குமூலம்
அதனையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த கருமலைக்கூடல் காவல்துறை, ராமகிருஷ்ணனை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவி தமிழரசி கடந்த சில மாதங்களாக வேறொரு நபருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், அதனை கேட்டதால் தங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவ தினத்தன்று இந்த தகராறு காரணமாகவே அவர் தனது உடலில் தின்னரை ஊற்றி தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறிய ராமகிருஷ்ணன், பின்னர் தனது மனைவி மனம் மாறி குளிக்க சென்ற நிலையில் அவர்மீது தீயை கொளுத்தி போட்டு எரித்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இத்தகவல் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.