Page Loader
ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு
ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு

ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு

எழுதியவர் Nivetha P
Sep 28, 2023
06:02 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்'ல் அமைந்துள்ளது பாலப்பூர் விநாயகர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிக பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம். 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், பிரம்மாண்ட முறையில் தயாரிக்கப்பட்ட லட்டு விநாயகர் முன் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுத்தமான நெய், உலர் பழங்கள் கொண்டு அதிக அளவிலான எடையில் இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது. அதன் பின்னர் அந்த லட்டு மீது தங்க முலாம் பூசப்பட்டு வெள்ளி கிண்ணத்தில் வைத்து பூஜைகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் இந்த லட்டு கோயில் நிர்வாகத்தினர் சார்பில் ஏலம் விடப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த முறை பழக்கத்தில் இருந்து வருகிறது.

ஏலம் 

கடந்தாண்டு ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு 

அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தயாரிக்கப்பட்ட இந்த 21-கிலோ எடைக்கொண்ட பிரம்மாண்ட லட்டு இன்று(செப்.,28) ஏலம் விடப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் ஆரம்பவிலை ரூ.1,116 என்று கோயில் நிர்வாகம் நிர்ணயித்த நிலையில், உள்ளூர்-வெளியூரினை சேர்ந்த 36 நபர்கள் ஏலம் கேட்டுள்ளனர். இதன் முடிவில் ரங்கா ரெட்டி மாவட்டத்தினை சேர்ந்த தசரி தயானந்த் ரெட்டி என்பவர் இந்த லட்டுவினை ரூ.27 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். கடந்தாண்டு ரூ.24.60 லட்சத்துக்கு இந்த லட்டு ஏலம் போனது. அதுவே இதுவரையிலான அதிகத்தொகை என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தாண்டு அதனை முறியடித்தது இந்த ஏலத்தொகை. இதனிடையே கடந்த 1994ம் ஆண்டு முதன்முறையாக இந்த லட்டுவினை ரூ.450க்கு விவசாயி ஒருவர் ஏலம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.