Page Loader
இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?
இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை

இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?

எழுதியவர் Prasanna Venkatesh
May 29, 2023
03:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஸ்டார்ட்-அப்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு அறிவித்திருக்கும் திட்டங்களும் இதற்கு ஒரு காரணம். தற்போது இந்தியாவில் 30 பில்லியன் டாலர் மதிப்பில் 90,000 ஸ்டார்ட்-அப்களும், 107 யுனிகார்ன் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான வழிமுறையை எளிமையாக்கியிருக்கிறது இந்திய அரசு. சரி, நாம் ஒரு ஸ்டார்ட்-அப்பை நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால், அதனை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்? முதலில் உங்கள் நிறுவனத்தை அரசின் நிறுவனப் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். உங்கள் நிறுவனத்தை Limited Liability Partnership நிறுவனமாவோ அல்லது தனியார் நிறுவனமாகவோ அல்லது கூட்டு நிறுவனமாகவோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டார்ட்-அப்

ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை: 

உங்கள் நிறுவனத்தை பதிவு செய்த பின், இந்திய அரசின் ஸ்டார்ட்-அப் இணையதளத்தில் அதனைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு startupindia.gov.in என்ற பக்கத்திற்கு சென்று Register ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் நிறுவனத்தின் விபரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின்னர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான அந்த இணையதளப் பக்கத்திலேயே DPIIT அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த அங்கீகாரத்தைப் பெறுவதன் மூலம், முதலீடுகள் பெறுவதும், வரிவிலக்கு பெறுவது உள்ளிட்ட நன்மைகளை அடைய முடியும். அவ்வளவு தான், இனி மேற்கூறிய நடவடிக்கைகளை முடிவடைந்து உங்களது பதிவு மற்றும் அங்கீகாரச் சான்றிதழ்களுக்கு காத்திருக்க வேண்டியது தான். இந்த மொத்த வழிமுறைக்கும் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை முன்னரே சரிபார்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.