மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றம்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சபையில் இன்று(மே.,18) சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
அதன்படி சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ தற்போது புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இவருக்கு மாற்றாக சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் முன்னதாக கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவராவார்.
இதனிடையே இந்த பொறுப்பு மாற்றமானது கிரண் ரிஜ்ஜு'விற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜீயம் முறைக்கு எதிராக சமீப காலமாக கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம் செய்து வந்தார்.
அதே நேரம், ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சிலர் தேச விரோத குழுக்களின் பகுதியாக இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது என்பது கவனிக்கத்தக்கது.
அமைச்சரவை
நீதித்துறை அமைச்சராக பணியாற்றியதை பாக்கியமாக எண்ணுவதாக ட்விட்டரில் பதிவு
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த அல்கா லாம்பா தனது ட்விட்டர் பக்கத்தில், கிரண் ரிஜிஜூ நீதிபதி நியமனம் மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட்டு வந்தது மோடி அரசுக்கு பெரும் பிரச்சனையினை கொடுத்தது.
இதனால் தற்போது மோடி அரசு சட்டத்துறை அமைச்சரை மாற்றி தனது இமேஜினை காப்பாற்றி கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக பணியாற்றியதை பாக்கியமாகவும் கவுரவமாகவும் கருதுகிறேன்.
மக்களுக்கு சட்டசேவைகள் மற்றும் நீதி வழங்க பெரும் ஆதரவாக இருந்தோர் அனைவருக்கும் எனது நன்றி.
இதே ஈடுபாடோடு புவி அறிவியல் அமைச்சராக பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.