ஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம்
குக்ர்'ன் செய்தி அறிக்கைபடி தாங்கள் பெறப்பட்ட பணத்தை கொண்டு இந்தியா முழுவதும் உணவு சந்தையினை நிறுவ வேண்டும், குழுக்களை வளர்க்கவும், கூடுதல் அம்சங்களை சேர்க்கவும், ஆரோக்கியமான உணவுக்கு மக்கள் தங்களை அணுகுவதை அதிகரிக்கவும் பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. ஆரம்பக்கட்டமாக 500க்கும் மேற்பட்ட வீட்டு சமையல்காரர்களை வைத்து பிரபா சந்தான கிருஷ்ணன், சரவணகுமார் கந்தசாமி மற்றும் நிர்மல்குமார் ஆகியோரால் நிறுவப்பட்ட நிறுவனம் தான் குக்ர். தங்கள் வாடிக்கையாளர்களின் உணவு தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு உணவளிக்கும் இந்நிறுவனம், அதே சமையத்தில் பல்வேறு ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுகளையும் வழங்கி வருகிறது.
சென்னையை முக்கிய தளமாக கொண்டுள்ள இந்நிறுவனம் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் செயல்படுகிறது
சுவை மற்றும் தரத்தில் சற்றும் குறைபாடு இல்லாமல், உணவகத்தில் வழங்கப்படும் உணவு வகைகளுக்கு இந்நிறுவனம் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை, ஓசூர், சிதம்பரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் சென்னையை முக்கிய தளமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் மற்றும் சமையல்காரர்கள் அனைவருமே FSSAI-சான்றுகளை பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாட்ஷாட், நேச்சர்பாக்ஸ், ஈவோ ஃபுட்ஸ் மற்றும் பிற நிறுவனத்துடன் போட்டியிடும் வணிகமானது, அடுத்த 5 ஆண்டுகளில் 2,00,000 வீட்டு சமையல்காரர்களை நிறுவனத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளது.