Page Loader
சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார் 
சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார்

சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார் 

எழுதியவர் Nivetha P
Aug 17, 2023
04:14 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது போயஸ்கார்டன் இல்லம் அவரது அண்ணன் மகள் மற்றும் மகனான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரிடம் வாரிசு என்பதால் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, போயஸ் கார்டனில் ஜெயா டிவி கட்டிடத்தின் காம்பவுண்ட் அருகே அமைந்துள்ள பிள்ளையார் கோயிலுக்கு, கடந்த 20 ஆண்டுகளாக சென்னை தி.நகரில் வசிக்கும் பூசாரி ஹரிஹரன்(42)பூஜை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த 15ம்தேதி, இவருக்கும், போயஸ் கார்டன் இல்லத்தில் தேசியக்கொடியினை ஏற்றச்சென்ற ஜெ.தீபாவுக்கும் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஹரிஹரன், ஜெ.தீபா மீது புகாரளித்தார். அதில் கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதா அனுமதியுடனும் அவரது மறைவிற்கு பிறகு சசிகலா அனுமதியுடனும் கோயிலுக்கு பூஜைச்செய்து வருவதாக கூறியுள்ளார்.

புகார் 

தனது சகோதரர் ஜெ.தீபக் தனக்கு எதிராக செயல்படுகிறார் - ஜெ.தீபா குற்றச்சாட்டு 

அதற்கான செலவும், சம்பளமும் சசிகலா தான் கொடுத்து வருகிறார் என்றும் கூறியுள்ளார். சுதந்திர தினம் அன்று அங்கு வந்த ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன்,"இனி இக்கோயிலில் பூஜை செய்யக்கூடாது, மீறி செய்தால் கொலை செய்து விடுவோம்" என மிரட்டியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று(ஆகஸ்ட்.,16)பூசாரி மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்த ஜெ.தீபா மற்றும் அவரது கணவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது சசிகலா தூண்டுதலால் தான் பூசாரி தங்கள்மீது புகாரளித்துள்ளார் என்றும், அவர் தான் தன்னை ஒருமையில் பேசியதாகவும் ஜெ.தீபா கூறினார். சசிகலாவுடன் சேர்த்துக்கொண்டு தனது சகோதரர் ஜெ.தீபக் தனக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறிய ஜெ.தீபா, சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.